26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு இருதயபுரம் பாலமுருகன் கோயில் 11ஆம் குறுக்கு வீதி புனரமைப்பு

உலக வங்கியின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளுர் மேம்பாட்டு ஆதரவு அபிவிருத்தி திட்டமானது மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர் மேம்பாட்டு ஆதரவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இருதயபுரம் பாலமுருகன் கோயில் 11ஆம் குறுக்கு வீதி 7.2 மில்லியன் ரூபா நிதியில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

இருதயபுரம் மேற்கு கிராம பொதுமக்களின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டு முன்னுருமைக்கு அமைய மாநகர சபை உறுப்பினர் பூபாலராஜா வேண்டுகோளின் கீழ் மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் குறித்த வீதிக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபையினர், கிராமமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles