மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை: பலருக்கு எதிராக வழக்கும் பதிவு

0
148

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையிலான பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர்களே
திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
குருக்கள்மடம் முதல் துறைநீலாவணை வரையான பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது,
மனிதபாவனைக்கு உதவாத தேயிலை, மிளகாய் தூள், கருவாடுகள் மற்றும் சிற்றுண்டிகள் என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மனித பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.