மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும், சுகாதார தொழிற்சங்க போராட்டம் எதிரொலித்தது!

0
114

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களும், சுகாதார ஊழியர்களும்
பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார ஊழியர் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் கே.துரைராஜ
சிங்கம் தலைமையில் பகிஸ்கரிப்புப் போராட்டம் இடம்பெற்றுது.
20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும், தற்போது வழங்கப்படும் சிறப்புக் கொடுப்பனவை 7 ஆயிரம் ரூபாவாகவும், சீருடைக் கொடுப்பனவு ஆயிரத்து 500 ரூபாவாகவும்
அதிகரிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் சிற்றூழியர் மேற்பார்வை நியமனத்தை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை காத்தான்குடி சுகாதர சேவை
ஊழியர்கள் முன்வைத்தனர்.