மட்டக்களப்பு காத்தான்குடிஅல் அமீன் மகா வித்தியாலயத்தில்செலான் பகசர திட்டத்தின் கீழ்,நூலகம் திறந்து வைப்பு

0
119

செலான் வங்கி தனது 36வது ஆண்டு நிறைவையொட்டி, தனது செலான் பகரச திட்டம் ஊடாக, ஆறு புதிய நூலகங்களை நாடளாவிய ரீதியில்
உள்ள பாடசாலைகளில் நிறுவியுள்ளது.
இது இளைய சமுதாயத்தை, ஊக்குவிப்பதிலும், கற்றல் கலாசாரத்தை வளர்ப்பதிலும், வங்கியின் தொடர்ச்சியான, அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க படியாகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாடளாவிய ரீதியில் நூலகங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தி செலான் வங்கி சிறுவர்களின் திறனை தொடர்ந்து வெளிக்கொண்டு
வருவதுடன் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக,
இலங்கை முழுவதும் உதவி தேவைப்படும் பாடசாலைகளில் புதிய நூலகங்களை உருவாக்கி வருகிறது.
காத்தான்குடியில் அமைந்துள்ள அல் அமீன் மகா வித்தியாலயத்தில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட நூலகம் இன்றைய தினம் மாணவர்களின் பாவனைக்குக்
கையளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், செலான் வங்கியின் உதவி பிரதம முகாமையாளர் ருவான் பெர்ணான்டோ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக, காத்தான்குடி மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம், செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய
முகாமையாளர் றிஸ்னி ஹூசைன், காத்தான்குடி கிளை முகாமையாளர் விலிங்டன் லக்ஸ்மன் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், செலான் வங்கி ஊழியர்கள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.