மட்டக்களப்பு கூழாவடி 8ஆம்குறுக்கு வீதி பகுதியைச் சேர்ந்த
11 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு

0
448

மட்டக்களப்பு கூழாவடி 8 குறுக்கு வீதி பகுதியைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் நேற்று மாலை பிரத்தியோக வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கூழாவடி எட்டாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த சக்திவேல் சஞ்சீவன் என்ற 11 வயதுடைய பாடசாலை மாணவன் நேற்று மாலை 5 மணி அளவில் கூழாவடி 7 ஆம் குறுக்கு வீதி உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தாயார் ஜெசிகளா சக்திவேல் தெரிவித்துள்ளார்.

காணாமல் போயுள்ளதாக தேடப்பட்டு வரும் தனது சிறுவன் தொடர்பான முறைப்பாட்டை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவன் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 0759606239, 0752724665 அல்லது 065 222 4356 தொலைபேசி இலக்கங்களுக்கோ மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.