மட்டக்களப்பில் வரலாற்று பாரம்பரிய மிக்க மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆ மஸ்ஜித் பற்றிய ஆவணப் படம் காத்தான்குடி கடற்கரையிலுள்ள சி.ஐ.ஜி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அன்வர் அலி காத்தன்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மௌலவி ஆதம்லெவ்வை, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளரும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளருமான அன்சார் நழீமி, பள்ளிவாயலின் செயலாளர் அஷ்ஷெய்க் அமீன் நழீமி, மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் பள்ளிவாயலின் ஆயுட்கால தலைவர் எம்.சுல்தான் பிரதி தலைவர் எம்.பாயிஸ் உட்பட உலமாக்கள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.