மட்டக்களப்பு நகரை தூய்மைப்படுத்தும் சமூக நலன்சார் பணியாளர்களின் செயல்திட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் வகையில் மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 25மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் 100 பெண் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு நகரை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன
அரசியலுடன் தொடர்புடைய மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்குஅரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான பாதை எனும்நிகழ்ச்சி திட்டத்தினை பெப்பரல் நிறுவனத்தினால் இலங்கையில் 25 மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்ற நிகழ்ச்சி திட்டத்திற்கு அமையகிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக வன்னிக்கோப் அமைப்பின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜூடிஜெயகுமார் வழிநடத்தலின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிரமதானம் நடைபெற்றது.
சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் உக்காதகழிவு பொருட்களை அகற்றும் பணியினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள உள்ளூhராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாநகர சபை இணைந்து மட்டக்களப்பு நகர் வாவிக்கரை பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி பகுதிகளில் உள்ள கழிவுபொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் உள்ளூhராட்சி மன்றங்களின் 100 பெண் உறுப்பினர்கள், மட்டக்களப்பு சமூக நலன்சார் பணியாளர்கள்,சமூக அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.