மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனையில் பாராட்டு விழா

0
125

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் புதிதாக நியமனம் பெற்று வருகை தந்தவர்களைப்
பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஊழியர்களினால் வலயக் கல்விப் பணிமனையை அழகுபடுத்தும் வகையில் பூச்சாடிகளும் வழங்கப்பட்டன.