மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது

0
207

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, இன்று நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களின் கலை நிகழ்வுகள்
இடம்பெற்றன.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சசைகள், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ,க.பொ.த சாதாரண தரம்
மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்படனர்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பழையமாணவர்கள் என பலர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்