மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் துரைராஜசிங்கம் இமையவன், பௌதீகவியலில், மாவட்ட நிலையில் முதலிடம்

0
261

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூர மாணவன் துரைராஜசிங்கம் இமையவன், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் இருந்து 15 மாணவர்கள் பொறியியல்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழத் தெரிவுக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களை கல்லூரி முதல்வர்
நேரில் அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.