மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் உதவித் திட்டம்

0
301

நாடளாவிய ரீதியிலான பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான மீனவ குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமசேவையாளர் பிரிவில் 50 வீட்டுத்திட்ட கிராமத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி ,கே.ஹெட்டிஹராச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம். சந்தன சமரசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.