மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் காஞ்சரங்குடா மாணிக்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் மிக சிறப்பாக இன்று நடை பெற்றது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காஞ்சிரங்குடா கிராம பொது அமைப்புக்களும் இணைந்து பொங்கல் விழாவினை நடாத்தினர்.
பாரம்பரிய முறைப்படி வயலில் நெல் அறுவடை இடம் பெற்று, விஷேட பூசை வழிபாடுகளுடன் பொங்கல் வைபவம்,
இடம் பெற்றது. ஆலய முன்றலில் பாரம்பரிய சம்பிரதாய முறையில் கரகம், கூத்து, வயல் அறுவடை பாடல் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.