மட்டு.ஆயித்தியமலை அன்னை இளைஞர்
கழகத்தினால் நஞ்சற்ற மரக்கறி உற்பத்தி

0
168

மட்டக்களப்பு ஆயித்தியமலை அன்னை இளைஞர் கழகத்தினால் நஞ்சற்ற மரக்கறி மற்றும் விற்பனை சந்தை, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்
வவுணதீவில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர், அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சைல்ட் பண்ட் மற்றும் அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் ஆயித்தியமலை அன்னை இளைஞர் கழகத்தினால் வாராந்த சந்தையாக வவுணதீவு பிரதேச செயலகத்தின்
முன்னால் அமையப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.