மட்டு.கல்லடி புனித அந்தோனியார்
சிற்றாலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

0
200

2022 கூட்டொருங்கியக்க ஆண்டின் மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று மாலை இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது.

கடந்த இரண்டு ஆண்டுகள் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்துடன் இணைந்த ஆலயமான கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் திருவிழா நிகழ்வுகள் மீண்டும் நேற்றையதினம் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான திருவிழா ஆரம்பமானது .

நான்கு நாட்கள் திருவிழாவாக சிறப்பிக்கப்படும் கல்லடி புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் பெருவிழா திருப்பலி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு இயேசு சபை மேலாளர் அருட்தந்தை டி .சகாயநாதன் எஸ் ஜெ . அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது .

கொடியேற்றத்துடன் ஆரம்பமான கல்லடி புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் முதல் நாள் திருப்பலி ‘ மகிழ்வாருடன் மகிழ்ந்து அழுவாருடன் அழுங்கள் ‘ எனும் தலைப்பில் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை அருட்பணி அனிஸ்ரன் மொறாயஸ் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .