மட்டு.காத்தான்குடியில் 15 குடும்பங்களுக்கு
நிவாரணப் பொதிகள் வழங்கல்

0
194

சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 15 குடும்பங்களுக்கு இந்த நிவாரண பொதிகள் இன்று வழங்கப்பட்டன.

புதிய காத்தான்குடி தெற்கு கிராம பல நோக்கு மண்டபத்தில் வைத்து இந்த நிவாரண பொதிகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர்; யு.உதய சிறீதரின் வழிகாட்டலில் காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் நிவாரணப்; பொதிகளை வழங்கி வைத்தார்.

இதில் பிரிவு கிராம உத்தியோகத்தர் திருமதி ஸம்ஹா, பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்;தர் முகம்மட் இர்பான், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ரிப்கா, திருமதி சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.