மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கலை கலாசார பேரவை நடாத்திய முத்தாரம் பல்சுவை இலக்கிய கதம்ப நிகழ்வு நேற்றிரவு சம்மேளனத்தின் அஹமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் கலை கலாசார பேரவையின் தலைவர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மேளன செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம்.ரமீஸ் ஜமாலி உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலை இலக்கியவாதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு கலை நிகழ்வு நடைபெற்றதுடன் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வு இடம் பெற்றது அத்துடன் சம்மேளன பிரமுகர்கள் பங்கு பற்றிய பட்டிமன்றமும் இடம்பெற்றது.