மட்டு. குருக்கள் மடத்தில் விழிப்புணர்வு மற்றும் சிரமதானம் முன்னெடுப்பு

0
277

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் – 2023ஜ முன்னிட்டு, ‘உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு தினம் ‘ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாளைக் குளத்தை மையப்படுத்தியதாக விழிப்புணர்வு மற்றும் சிரமதானம் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமையில் ‘உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்’ எனும் தலைப்பிலான நிகழ்வுகள்
முன்னெடுக்கப்பட்டன. ஏத்தாளைக் குளத்தின் பெருமையை வெளிக்கொண்டு வரும் முகமாக, பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரஜனி பாஸ்கரனினால் விழிப்புணர்வு கருத்துரையும் ஆற்றப்பட்டது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், அலுவலக உத்தியோகத்தர்கள் , ஆலயங்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள்
என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வினை குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் மற்றும் செல்லக்கதிர்காம ஆலயத்தின் நிர்வாகத்தினர் இணைந்து ஒழுங்கமைப்பு செய்தமை குறிப்பிடடத்தக்கது.