மட்டு.பேத்தாழை விபுலானந்தா தேசிய பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

0
201

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை விபுலானந்த தேசிய பாடசாலையில் பாடசலை அதிபர் சி.முருகவேல் தலைமையில் நேற்றைய தினம்
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கல்வி நிர்வாக பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன், திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தட்சணாமூர்த்தி
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன், ஓய்வு பெற்ற அதிபர் த.சந்திரலிங்கம்,அழைப்பு அதிதிகளாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.டபிள்யு,சந்திரகுமார மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அதிதிகள் மலர் மாலை அணிவித்து மாணவர்களினால் பான்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மாணவர்களின் அணிநடை உடற்பயிற்சி கண்காட்சி என்பன பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
பெற்றோர்கள்,பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுடன் ஆசிரியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
இல்ல விளையாட்டு போட்டியில் அலைமகள், மலைமகள்,கலைமகள், என மூன்று இல்லங்களின் மாணவர்களுக்கிடையே போட்டி நிகழ்சிகள்
நடைபெற்றன.
அலைமகள் இல்லம் முதல் இடத்தினை பெற்றது.
நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சாண்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன் அவர்களது சேவையினை பாராட்டி பாடசாலை நிர்வாகம் மற்றும் இராஜங்க அமைச்சர் ஆகியோர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.