கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு,மண்டூர் கணேசபுரம் அருள்மிகு ஸ்ரீவிநாயகர் கண்ணகியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்தின் மண்டலாபிசேகபூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் சங்காபிசேகமும் நடைபெற்றது.
பக்தர்கள் புடைசூழ விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து பால்குடபவனி சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பெண்கள் தலையில் பால்குடங்களை சுமந்தவண்ணம் அரோகரா கோசத்துடன் ஆலயத்தினை சென்றடைந்தனர்.
இதனை தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்தியாகிய விநாயகருக்கு பாலாபிசேகம் நடைபெற்றது.
கும்பாபிசேக பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மயூரவதன் குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 03-06-2022அன்று அருள்மிகு ஸ்ரீவிநாயகர் கண்ணகியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து பூர்த்தி நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தில் பிரதான கும்பம் மற்றும் பரிபாலன கும்பங்கள் வைக்கப்பட்டு சங்காபிசேக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து பிரதான கும்பங்கள் உட்பட அனைத்து கும்பங்களும் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த உற்சவத்தில் பெருள்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.