மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் அறவழிப் போராட்டம், இன்றுடன் 174ஆவது நாளாக தொடர்கிறது
கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து, ஜப்பான், தென் ஆபிரிக்கா மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தூதுவர்கள் நேரில் சமூகமளித்து
கலந்துரையாடல்களை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தனர்.
மூடிய அறையில் பண்ணையாளர்களின் பிரதிநிதிகளுக்கும், தூதுவர்களுக்குமிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது வரை சுமார் 700 மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.