மட்டு.மாமாங்கம் சதாசகாய மாதா தேவாலயத்தில் ஈஸ்டர்
குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து அஞ்சலி

0
136

மட்டக்களப்பு மாமாங்கம் சதாசகாய மாதா தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு
அஞ்சலி செலுத்தும் முகமாக விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு
மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார்,
அருட்தந்தை யோசப் மேரி, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.