மட்டு.முனைக்காடு கிழக்கு மாணிக்க போடி, நாகதம்பிரான் கோயில் வீதி புனரமைப்பு

0
180

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிழக்கு மாணிக்க போடி, முனைக்காடு வடக்கு நாகதம்பிரான் கோயில் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைய 04 மில்லியன் ரூபா செலவில் இதன் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.