மட்டு.வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

0
249

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தின், 2023ம்
ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில்,பிரதம அதிதியாக
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிறிதரன் கலந்து கொண்டார்.
மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி என்பன இடம்பெற்றதுடன், விளையாட்டு
போட்டிகளில் 520 புள்ளிகளைளைப் பெற்று கலைமகள் இல்லம் முதலாமிடத்தை சுவீகரித்ததுடன், 515
புள்ளிகளைப் பெற்று அலைமகள் இல்லம் இரண்டாம் இடத்தையும் தட்டிக் கொண்டது.
வெற்ற பெற்ற இல்லங்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பட்டிருப்பு வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.