நாட்டின் 5 மாவட்டங்களில் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க காலியின் எல்பிட்டிய, நெலுவ, யக்கலமுல்ல, நாகொட பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும், களுத்துறையின் இங்கிரிய, ஹொரண, புளத்சிங்கள மத்தகம பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும், மாத்தறையின் பிட்டபெத்தர, பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்தினபுரியின் குருவிட்ட, இரத்னபுரி, எலபாத்த, எஹெலியகொட, கலவான பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் நிலை 2 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையின் வலலாவிட்ட, பாலிந்தநுவர பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலையின் தெஹியோவிட்ட, தெரணியகல, வரகாபொல, யட்டியாந்தோட்டை, கேகாலை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தறையின் அத்துரலிய பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரியின் பெல்மடல்ல, நிவித்திகல. பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 5 மணிவரை எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.