மண்முனை மேற்கு பிரிவில் கிருமி தொற்று நீக்கம்

0
407

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொதுச்சந்தை, பிரதேச செயலகம், பிரதேச சமூர்த்தி அலுவலகம், பிரதேச சபை மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

அக்சன் யுனிற்ரி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இச் செயற்பாடு தொடர் நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொவிட் தொற்று மிக வேகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவிவரும் நிலையில் இக் கிருமி தொற்று நீக்கி திரவம் பொது இடங்களில் இளைஞர்களின் உதவியுடன் விசிறப்பட்டது.