மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

0
160

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில இன்று; நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நியமனம் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் டி.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் அசாத், மாவட்ட மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.தர்மினி மண்முனை வடக்கு பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரின்சி சுலோஜினி ஆகியோரின் ஒழுங்கமைப்பில் 32 புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேசத்திற்குரிய சனசமூக மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் தெரிவுக்கான நேர்முக பரீட்சை மற்றும் எழுத்து மூலப்பரீட்சை புள்ளிகள் மூலம் பழைய மத்தியஸ்தர்கள் 9 பேர் மற்றும் புதிய 23 பேர் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 32 உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் மத்தியஸ்த சபை தவிசாளராக சீனித்தம்பி விஷ்ணுமூர்த்தி, உதவி தவிசாளராக வி. குகதாசன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.