மண்முனைப்பற்று பிரதேசத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

0
113

வரவு-செலவு திட்டம் ஊடாக அரசாங்கம் கிராமிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்
கிராம மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 158 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கிவைத்தார்.

முதல் கட்டமாக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் 142மீனவர்களுக்கான வலைகளும் 12பேருக்கான தோணிகளும் 04பேருக்கான மீன்விற்பனைக்கான துவிச்சக்கர வண்டிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த தமிழ் தலைமைகமே பதில் சொல்லவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.