மதங்களை இழிவுபடுத்திய யுவதி கைது!

0
121

மத தத்துவம் மற்றும் கலாசாரத்தை அவமதித்ததாக கூறப்படும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.