காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து மன்னாரில் கலந்துரையாடல்!

0
90

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும் அது தொடர்பாக வேலை செய்யும் சிவில் சமூக அமைப்புகளுக்கும், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தி அந்த வலுப்படுத்துதல் ஊடாக காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் குறித்து இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் முன்வைக்கப்படவில்லை என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 300 வரையிலான நபர்களுடைய படங்கள் மற்றும் காணாமல் போன விதம் தொடர்பில் ஆவணமாக தயாரிக்கப்பட்ட புத்தகமொன்று சர்வதேச நிறுவனம் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.