மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு

0
123

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் திட்டத்தின் கீழ் 679 மருந்து கொள்வனவுக்காக அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 278 மருந்துகள் தற்போது நாட்டின் சுகாதார அமைப்பில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, பயன்படுத்தப்படும் மருந்துகள் தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.