Covid-19 வைரஸ் தாக்கத்தினால் நடைமுறையிலுள்ள பயணத் தடை காரணமாக பாதிக்கப் பட்ட மறவன்புலவு கிழக்கு கிராம மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அமரர் நமசிவாயம் வல்லிபுரநாதன் அவர்களின் ஓராண்டு நினைவாக அவரது குடும்பத்தினரால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன அரிசி மா சீனி பருப்பு தேயிலை சவர்க்காரம் சலவைத்தூள் உள்ளிட்ட தலா ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான நூறு நிவாரணப் பொதிகள் 100 வழங்கி வைக்கப்பட்டது.
மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் முன்றலில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச 12 ஆவது படைப் பிரிவின் அதிகாரி லெப்டினன்ட் உதயங்க மற்றும் அமரர் நமசிவாயம் வல்லிபுரநாதன் அவர்களின் மனைவி பிள்ளைகள் கலந்து கொண்டனர்