கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம் வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம்.’ என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.