மழையுடனான காலநிலை! : இரணைமடுக்குள வான் கதவுகள் திறப்பு!

0
20

நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக, இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தின் 14 வான் கதவுகளும் இன்று காலை திறந்துவிடப்பட்டன.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் குளத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியன், பன்னங்கண்டி மற்றும் கனகராயன் ஆற்றின் அருகிலுள்ள மக்கள், அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.