மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 50,000ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை !

0
260
மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை சீரான முன்னேற்றத்தை காட்டுவதாகவும் , மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை வருகை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின் படி , மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மொத்தம் 53,838 பேர் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் . இதன்படி ஜனவரி 01 முதல் மார்ச் 13 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 264,022 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, சர்வதேச பயணிகளின் வருகை சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரியாக 4,141 ஆக அதிகரித்துள்ளது.