மின் கட்டணத்தில் திருத்தம்!

0
95

உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கையின் அடிப்படையிலான பகுப்பாய்விற்கமைய, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.