முட்டை ஊடாக இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!

0
136

இஷ்டத்துக்கு முட்டைகளை இறக்குமதி செய்தால், “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே, முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு காரணமாக முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.