முதியோருக்கு தொற்றா நோய்கள்
தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

0
162

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் முதியோர் தினத்தினை முன்னிட்டு பிரதேசத்தல் வாழும் முதியோர்களுக்கான ஆரோக்கியமான வாழ்வு எனும் அடிப்படையில் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.நிம்ஸியின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தம்பிலுவில் ஆயூர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் றுஸிகா கலந்து கொண்டு தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கருத்துகளை வழங்கினார்.

சுதேச வைத்திய அமைச்சின் ஊடாக நாடாத்தப்பட்ட பிரதேச முதியோர்களுக்கான தொற்றாத நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிருவாகப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சசிந்திரன் மற்றும் துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.