முன்னாள் ஜனாதிபதிக்கு மாதாந்தம் இவ்வளவு தொகையை செலவிடுகிறதா அரசு?

0
149

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக இலங்கை அரசாங்கம் மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாயை செலவிடுகிறது என ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலர் கொடுப்பனவுகளுக்காக 9 இலட்சத்து 91 ஆயிரம் செலவிடப்பட்டது.

மேலும், தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர செலவுகளுக்கு 3 இலட்சத்து 38 ஆயிரத்து 387 ரூபாய் 60 சதம் செலவிடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திடம் விடுத்த தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் பதிலில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.