முல்லைத்தீவில் காணி அபகரிப்பு! : மக்கள் குடியிருக்க காணிகள் இல்லை! – எம்.பி துரைராசா ரவிகரன்

0
11

முல்லைத்தீவு மாவட்டத்தில், படையினர், வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள், மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இன்று இடம்பெற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில், 255 குடும்பங்களுக்கு, குடியிருப்பதற்கு காணி இல்லை என, இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.