நுவரெலியா நோர்வூட் நகரில், டீசலை பெற்றுக் கொள்வதற்காக, மூன்று நாட்களாக, நீண்ட வரிசையில் காத்திருப்பதாக, வாகன சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள டீசலுக்கான தட்டுபாடு காரனமாக, இன்றையதினமும், நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்க முடிவதாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.அந்தவகையில், நோர்வூட் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், டீசல் இல்லை என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும், இவ்வாரனதொரு நிலையே கானப்பட்டது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரனமாக, தேயிலை தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களும், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தோட்ட புறங்களுக்கு டீசலை கொள்வனவு செய்ய வந்த லொறிகளும், மூன்று நாட்களாக டீசல் நிரப்பும்
நிலையத்தில் காத்திருக்கின்றன.