உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 2023 ஆம் ஆண்டில் வேட்பு மனு கோரப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை வழங்காமையின் காரணமாகத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
ஆனால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குரிய நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.