செப்டெம்பர் முதல் வாரத்திற்குள் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதன் பின்னர் டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.