இலங்கையில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பானந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நபரின் பிரேத பரிசோதனையின் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
பானந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இது இலங்கையில் இடம்பெற்ற 22 ஆவது கொரோனா மரணமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.