மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல்

0
232

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கைகான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.