இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இன்று (15) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP10 வரிச் சலுகையை மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவொன்றும் அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.