மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

0
18

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய நிஷாந்த அனுருத்த வீரசிங்க அந்தப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக சேவையில் விசேட தரநிலை அதிகாரியான கமல் அமரசிங்கஇ இறுதியாக வடமேல் மாகாண சபையின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன், வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளராகவும், புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.