யாத்திரை சென்ற பஸ் தீப்பற்றி எரிவு- ஒருவர் உயிரிழப்பு!

0
15

உடமலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜேதவனாராமயவுக்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே இன்று அதிகாலை யாத்திரிகர் குழுவை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று தீப்பற்றி எரிந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை பஸ்ஸொன்று தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாத்திரிகர் குழுவை ஏற்றிச்சென்ற பஸ் தீப்பற்றி எரிந்ததாகவும் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை உடமலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.