யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
இதன்படி யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.