யாழில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு அரசின் இடர்கால கொடுப்பனவு வழங்கிவைப்பு!

0
290

யாழ் மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் அரசினால் இடர்கால நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று காலையில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தொடர்ச்சியாக ஏனைய  குடும்பங்களுக்கும் குறித்த இடர்காலநிதி வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

யாழ்  மாவட்டத்தில் சுமார் 75,000 குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்திபெற்று வருகின்ற குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதுஇன்று காலையில் இருந்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலரின் வழிகாட்டுதலின் படி அரசின் இடர் கால 5 ஆயிரம்   கொடுப்பனவு இன்று காலையிலிருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்