வடக்கு மாகாண மாணவர்கள், சில துறைகளை உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால், வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு, வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலை இருப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ். உயர் கல்விக் கண்காட்சி, இன்று, யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
இதில், பிரதம விருந்தினராக, வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினராக, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் பங்கேற்றதுடன், கௌரவ விருந்தினராக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பங்கேற்றார்.
இதன் போது, விருந்தினர்கள், கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர், அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும், உயர் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைப்பதாகவும், மாணவர்கள், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.